இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 933 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 933 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2020-08-08 05:15 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 19.64 லட்சம் கடந்திருந்தது.  இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 62,538 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு இருந்தன.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்து 27 ஆயிரத்து 75 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்புகளுக்கு நேற்றுவரை 13 லட்சத்து 78 ஆயிரத்து 106 பேர் குணமடைந்தும், 41,585 பேர் உயிரிழந்தும் இருந்தனர்.

நாட்டில் கடந்த புதன்கிழமை கொரோனா பாதிப்புகள் 19 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது.  அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 18 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது.  இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்குள் ஒரு லட்சம் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு 20 லட்சம் என்ற எண்ணிக்கையை நேற்று அடைந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 612 ஆக உயர்ந்து உள்ளது.

6 லட்சத்து 19 ஆயிரத்து 88 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 14 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  ஒரே நாளில் 933 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,518 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்