விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த மதுரை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-21 11:31 GMT
மதுரை,

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு கடந்த 13-ந் தேதி புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதன்படி, விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை,  கொரோனா நோய்த் தொற்று பரவுவதால், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை என்றும், தமிழக அரசின் தடை உத்தரவு செல்லும் என  மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இந்த நிலையில்,   விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் ராமசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். 

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்