இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்: ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்தும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-23 14:40 GMT
புதுடெல்லி,

எல்லாம் நல்லபடியாக சென்றால்  இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா கொரோனா தடுப்பு மருந்தை பெற்று விடும் என்று   மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  ஆனால், கொரோனாவுக்கு  தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலையில்தான் உள்ளன. இந்த ஆண்டு கிடைத்துவிடுமா அல்லது அடுத்த ஆண்டுதான் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், “ கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறிய உலக நாடுகள் அனைத்தும் முயற்சித்து வருகின்றன. 26 மேற்பட்ட கொரொனா தடுப்பு மருந்துகள் மருத்துவ பரிசோதனை என்ற நிலையை எட்டியுள்ளன. இந்தியாவில் மூன்று கொரோனா தடுப்பு மருந்துகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன. மருத்துவ பரிசோதனை சிறப்பாக சென்றால்,  இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்