என்னிடம் பேஸ்புக் கணக்கு இல்லை, பிறகு எப்படி முடக்க முடியும்; பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங்

நான் பேஸ்புக் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதி, எனக்கு புதிதாகக் கணக்கு வேண்டும் எனக் கேட்பேன் என்று பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-03 13:26 GMT
ஐதராபாத்,

பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தனது  பேஸ்புக் கணக்கில் மத விரோதத்தைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வைப் பரப்பும் கருத்துகளைத் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது கணக்கை பேஸ்புக் முடக்கியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங், “  ''எனக்குக் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பேஸ்புக் கணக்கு  கிடையாது.  கடந்த 2018, அக்டோபர் 8-ம் தேதி எனது பேஸ்புக் பக்கத்தை யாரோ சிலர் ஹேக் செய்துவிட்டார்கள் என்று ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருக்கிறேன். அதன்பின் 2019-ம் ஆண்டு பேஸ்புக்கில் கணக்குத் தொடங்கி அதையும் நீக்கிவிட்டேன்.

காங்கிரஸ்கட்சியின் அழுத்தத்தின் பெயரில் பேஸ்புக் நிறுவனம் இயங்குகிறது என நான் நினைக்கிறேன்.நான் பேஸ்புக் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதி, எனக்கு புதிதாகக் கணக்கு வேண்டும் எனக் கேட்பேன், அனைத்து விதிமுறைகளுக்கும் கட்டுப்படுகிறேன் எனத் தெரிவிப்பேன். பேஸ்புக் பயன்படுத்த எனக்கு உரிமை இருக்கிறது, நான் அனுமதி பெறுவேன்” என்றார்.

மேலும் செய்திகள்