மராட்டிய மாநிலம் மும்பையில் இன்று காலை லேசான நிலநடுக்கம்

மராட்டிய மாநிலம் மும்பையின் வடக்குப் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2020-09-05 04:15 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பைக்கு வடக்கே சுமார் 98 கி.மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இன்று காலை 6.36 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர்  அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை.  இந்த தகவலை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றும் 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்