நீட் தேர்வு மாணவர்களுக்காக மேற்கு வங்காளத்தில் நாளை முழு ஊரடங்கு ரத்து-முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு

நீட் தேர்வு மாணவர்களுக்காக மேற்கு வங்காளத்தில் நாளை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Update: 2020-09-11 08:25 GMT
கொல்கத்தா, 

மேற்குவங்காள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வாரத்தில் 2 நாட்கள் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த வாரத்தில் இன்றும் (வெளளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. 

நாளை மறுநாள (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெறுதையொட்டி தேர்வு மையத்திற்கு செல்வதற்கு வசதியாக மாநிலத்தில் முழு ஊரடங்கு விதிகளை தளர்த்தும்படி முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று நாளை மட்டும் முழு ஊரடங்கு ரத்துசெய்யப்படுவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து உளளார்.

மேலும் செய்திகள்