இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் பாதுகாப்பின்றி கூடியதும் ஒரு காரணமாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2020-09-21 11:22 GMT
புதுடெல்லி

மாநிலங்களவையில் தப்லீக் ஜமாத்ன  தொடர்பாக சிவசேனா எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி,எழுத்துபூர்வமாக அளித்துளா பதிலில் கூறி இருப்பதாவது:-

கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் ஜமாத்தில் கொரோனா விதிகளை மீறி ஒன்றாகக் கூடியிருந்த 236 பேரை டெல்லி போலீசார் கைதுசெய்தனர். 2,361 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.

டெல்லி அரசு கொரோனா விதிகளை முழுமையாக அமல்படுத்தி,பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், மூடப்பட்ட ஒரு அரங்கிற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்தவிதமான சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல், சானிடைசர் இல்லாமல், முகக்கவசம் அணியாமல் ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் கூடியதும் ஒரு காரணமாகும்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்