ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு- தியேட்டர்கள் திறக்க அனுமதி

அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2020-09-30 14:46 GMT
புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  வைரஸ் பரவல் கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக தளர்வுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  அதன்படி, தற்போது அமலில் உள்ள 4 ஆம்  கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்றோடு முடிவுக்கு வருகிறது. 

இதையடுத்து, ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களை காணலாம்

  • அக்.31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு
  • தியேட்டர்களை அக்.15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி -50 சதவிகித இருக்கைகளையே நிரப்ப வேண்டும்
  • நீச்சல் குளங்கள் பொழுது போக்கு பூங்காக்களை திறக்கலாம்.
  • பள்ளி, கல்லூரிகள் , பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்
  • அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்