மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி தங்கம் பறிமுதல்; மேற்கு வங்காளத்தில் 4 பேர் கைது

மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-10-02 20:21 GMT
கொல்கத்தா,

மியான்மரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிலிகுரியில் வந்து கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனத்தை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதில், 4 பேர் இருந்தனர். அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மியான்மரில் இருந்து மணிப்பூரில் உள்ள இந்திய எல்லை வழியாக தங்கத்தை கடத்தி வருவதாகவும், ஸ்ரீகங்காநகரில் அதை ஒப்படைக்க போய்க்கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வாகனத்தில் சோதனையிட்டதில், 202 தங்க கட்டிகள் இருந்தன. அவற்றின் எடை 33 கிலோ. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.17 கோடி ஆகும்.

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கொண்டு வந்த 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்