தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற மத்திய மந்திரியின் ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தின் ஹெலிகாப்டரில் திடீரென்று கோளாறு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-10-17 16:28 GMT
பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியில் உள்ள பா.ஜ.க. தேர்தல் பிரசார பணிகளில் தீவிரமுடன் இறங்கி உள்ளது.

அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்பவர்களின் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.  இதில், பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் இடம் பெற்று உள்ளனர்.  இந்நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஹெலிகாப்டர் ஒன்றில் புறப்பட்டு ஜான்ஜர்பூர் பகுதிக்கு இன்று சென்றுள்ளார்.

ஆனால் அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பின்னர் அதில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.  ஹெலிகாப்டரின் மின் இறக்கை ஒன்று சிறிய அளவில் பாதிப்படைந்து உள்ளது.  இந்த சம்பவத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் காயமின்றி தப்பினார்.  அவர் நலமுடன் உள்ளார்.

மேலும் செய்திகள்