காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.5 ஆக பதிவு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-11-02 03:44 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஹன்லே நகரில் இருந்து வடமேற்கே 51 கி.மீ. தொலைவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

கடந்த சில நாட்களாக நாட்டின் வடபகுதிகளான அருணாசல பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.  இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அச்சத்துடனேயே காணப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்