இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா -சீனா குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியபட்டு உள்ளது.

Update: 2020-11-13 06:36 GMT
புதுடெல்லி

இந்திய நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால், இறக்குமதிக்கு ஒருவாரம் தடை விதிப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாசு இன்டர்நேசனல் நிறுவனம் சீனாவுக்கு அனுப்பிய பதப்படுத்திய மீன்களில் மாதிரிகளை எடுத்துச் சோதனை செய்ததில் 3 மாதிரிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகச் சீனச் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்திடம் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய ஒருவாரத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்