மராட்டியத்தில் வரும் திங்கள் கிழமை முதல் மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி

மராட்டியத்தில் வரும் திங்கள் கிழமை முதல் மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-14 10:58 GMT
மும்பை,

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25  ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.  தொற்று பரவல் குறையத்தொடங்கியதும் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. 

இதனை பின்பற்றி பல்வேறு மாநிலங்களில் கோவில் உள்பட மத வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால், மராட்டியத்தில் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால், எதிர்க்கட்சியான பாஜக மராட்டிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

இந்த நிலையில்,  வரும் திங்கள் கிழமை முதல் மராட்டியத்தில் கோவில் உள்பட மத வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என மாநில  அரசு அறிவித்துள்ளது. மத வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை விதிகள் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் எனவும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்