குளிர்காலம் தொடங்கியது: கேதார்நாத் கோவில் நடை அடைப்பு

கடுமையான பனிப் பொழிவால் கேதார்நாத் கோவில் நடை அடைக்கப்பட்டது.

Update: 2020-11-16 11:27 GMT
டேராடூன்,

இமயமலையில் உள்ள கேதார்நாத் கோவில் குளிர்காலம் தொடங்கியதை முன்னிட்டு பூஜைகளுக்குப் பின், காலை 8.30 மணிக்குக் கோவிலின் கதவுகள் அடைக்கப்பட்டது.

உற்சவ டோலி எனப்படும் மலர்ப் பல்லக்கில் சிவனுடைய விக்ரகம் வைக்கப்பட்டு, உகி மடத்திலுள்ள ஓம்காரேசுவரர் கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு குளிர்கால வழிபாடுகள் நடைபெறும்.

கொரோனா காரணமாகத் தாமதமாகத் தொடங்கி, நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் கேதார்நாத் கோவிலுக்கு வந்து 1.35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கங்கோத்ரி கோவில் நடை குளிர்காலம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று நடை அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்