உ.பியில் ”லவ் ஜிகாத்” க்கு எதிராக அவசர சட்டம்; மாநில அமைச்சரவை ஒப்புதல்

உத்தர பிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2020-11-24 18:57 GMT
லக்னோ,

‘லவ் ஜிகாத்‘ என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாரதீய ஜனதா தலைவர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி புரியும்  மத்திய பிரதேசம் மற்றும் அரியானா போன்ற மாநிலங்கள் ‘லவ் ஜிகாத்‘திற்கு எதிராக சட்டம் இயற்ற முடிவு செய்து உள்ளன.

அதேபோல், உத்தர பிரதேசத்திலும் லவ் ஜிகாத்திற்கு எதிரான அவசர சட்டம் பிறப்பிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின், கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது.அவ்வாறு திருமணம் செய்தவரை, ஜாமினில் வர முடியாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க, இந்த சட்டம் வகை செய்யும்.

மேலும் செய்திகள்