அபோதாபாத்தை நினைவு படுத்துகிறோம் ”ஐநாவுக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை -இந்தியா

அபோதாபாத்தை நினைவு படுத்துகிறோம் ஐநாவுக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என இந்தியா கூறி உள்ளது.

Update: 2020-11-25 16:03 GMT
புதுடெல்லி

பாகிஸ்தானின்  ஐ.நா தூதர் முனீர் அக்ரம் ஐ. நா பொதுச்செயலாளர் அண்டோனியா  குத்ரெஸை சந்தித்தார். அப்போது அவர் இந்தியா "பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக" கூறப்படும் பாகிஸ்தான் அரசு ஆவணத்தை அவரிடம் ஒப்படைத்தார். 

இது குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, தூதர் டி.எஸ்.திருமூர்த்தி  செய்துள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தான் முன்வைத்த பொய்களின் ஆவணம் நம்பக் தன்மையற்றது. 

ஆவணங்களை உருவாக்குவது மற்றும் தவறான கதைகளை வெளியிடுவது பாகிஸ்தானுக்கு புதியதல்ல, அல்கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பல ஆண்டுகளாக ஒளிந்துகொண்டு  இருந்த பாகிஸ்தான் நகரமான அபோதாபாத்தில் உலகில் அதிக எண்ணிக்கையிலான ஐ.நா. வால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் நிறுவனங்களின் புரவலர்கள் இருப்பதை நினைவூட்டுகிறோம் என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்