ஹெல்மெட் இல்லை எனில் எரிபொருள் இல்லை: மேற்கு வங்காள அரசு அறிவிப்பு

ஹெல்மெட் இல்லையெனில் இரு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Update: 2020-12-04 16:53 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில், வாகன ஓட்டிகளுக்கென அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.  அப்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு பெட்ரோல் பங்கில் எரிபொருள் வழங்கப்படாது.

இந்த புதிய விதி கொல்கத்தா நகரில் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.  இந்த புதிய விதியானது, வருகிற 8ந்தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்