உத்தர பிரதேசத்தில் மேலும் 1,354- பேருக்கு கொரோனா பாதிப்பு
உத்தர பிரதேசத்தில் மேலும் 1,354- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் மேலும் 1,354- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,852 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 579- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 18,382- பேர் சிகிச்சையில் உள்ளனர்.