திரிணாமுல் எம்.பி சதாப்தி ராய் விரைவில் பா.ஜனதாவில் சேர திட்டம்...? நாளை முக்கிய முடிவு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சதாப்தி ராய் விரைவில் பா.ஜனதாவில் சேர திட்டமிட்டு உள்ளார். நாளை முக்கிய முடிவு எடுக்க உள்ளார்.

Update: 2021-01-15 15:10 GMT
Image courtesy : IANS/Twitter
கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர்களை பாரதீய ஜனதா தன் பக்கம் இழுத்து வருகிறது. சமீபத்தில்  திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் மண்டலும் பாஜகவில் சேர்ந்தனர். 

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு முதல் பீர்பூம் தொகுதி திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சதாப்தி ராய், நாளை பிற்பகல் 2 மணிக்குத் தனது முடிவை அறிவிக்கப்போவதாக முகநூலில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நாளை அவர் டெல்லி செல்லப்போவதாகவும் மத்திய அமைச்சர்  அமித்ஷாவை சந்திக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து சதாப்தி ராய் கூறும் போது நான் ஒரு எம்.பி., யாரையும் சந்திக்க முடியும். 2009 ல் நான் முதன்முதலில் எம்.பி. ஆனபோது, எல்லோரும் என்னை ஒரு நடிகை  அரசியல்வாதி அல்ல என்று சொன்னார்கள். ஆனால் அனைவருக்கும் அது  தவறு என்று நிரூபித்தேன். இன்று எனது தொகுதியில் உள்ளவர்கள் என்னிடம் ஏன் அங்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று கேட்கிறார்கள். உண்மையான காரணத்தை நான் அவர்களிடம் சொல்ல வேண்டும், ”என்று  கூறினார்

மேலும் செய்திகள்