இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் பரவிய உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 114 ஆக உயர்வு

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் பரவிய உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 114 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2021-01-15 19:11 GMT
புதுடெல்லி,

சீனாவில் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள புதிய வகை கொரோனா தொற்றுக்கு இந்தியா அதிகளவில் பாதிப்புகளை சந்தித்து உள்ளது.  அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் இறுதியில் இங்கிலாந்து நாட்டில் உருமாறிய மற்றொரு வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  இது முன்புள்ள வகையை விட எளிதில் பரவும் தன்மையை கொண்டுள்ளது.

இதனால், இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து சேவையை பல்வேறு நாடுகள் துண்டித்து கொண்டன.  எனினும், இந்த புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று வரை 109 ஆக இருந்தது.  இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 5 பேருக்கு இந்த புதிய தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 109ல் இருந்து 114 ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்