தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம்: 580 பேருக்கு பக்கவிளைவுகள்- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம் அடைந்து உள்ளனர்: 580 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Update: 2021-01-18 14:46 GMT
படம்: ANI

புதுடெல்லி

இந்தியாவில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தொடர்ந்து நேற்றும், இன்றும் நடைபெற்றது.

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 வயது நபருக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். மூன்று டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தது. அதில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விளைவுகளால் மரணம் அடையவில்லை எனத் தெரியவந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்றொருவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்தவர். இவருக்கு 43 வயது. நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவர், இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்முடிவில் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.

இதுகுறித்து சுகாதார  அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேசம்  & கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு பேர் மரணமடைந்து உள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுகாதார ஊழியர் மரணம் தடுப்பூசி தொடர்பானதல்ல; இரண்டாவது நபருக்கு பிரேத பரிசோதனை இன்று திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனவரி 18 இன்று, நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்ட மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை மாலை 5 மணிக்குள் 1,48,266 ஆக உள்ளது.

தடுப்பூசி போட்டபட்டவர்களில்   580 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டு உள்ளது,  இதில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்