மே.வங்காளத்தில் பனி மூட்டம் காரணமாக சாலை விபத்து: 13 பேர் பலி, 18- பேர் காயம்

மேற்கு வங்காளத்தில் பனி மூட்டம் காரணமாக சாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 13- பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-01-20 03:55 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று இரவு பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர்.  காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.  

மேலும் செய்திகள்