பீகார் மந்திரிசபை விரிவாக்கம்; 17 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்பு

பீகார் சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

Update: 2021-02-09 23:21 GMT
பீகாரில், மந்திரியாக பதவி ஏற்ற பா.ஜனதாவை சேர்ந்த சையது ஷாநவாஸ் ஹூசைனுக்கு கவர்னர் பாகுசவுகான் வாழ்த்து
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் 7-வது முறையாக முதல்-மந்திரி ஆனார். நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்று கிட்டத்தட்ட 3 மாதங்கள் நெருங்கும் நிலையில் நேற்று முதன்முறையாக பீகார் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் அண்மையில் பீகார் எம்.எல்.சி. தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும், அக்கட்சியின் செய்தித்தொடர்பாளருமான சையது ஷாநவாஸ் ஹூசைனுக்கும் மந்திரிசபையில் இடம் கிடைத்து உள்ளது. பா.ஜனதாவை சேர்ந்த 9 பேர் உள்பட மொத்தம் 17 புதுமுகங்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு மாநில கவர்னர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விரிவாக்கத்தின் மூலம் பீகார் மந்திரிசபையில் மந்திரிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது. பீகார் மந்திரிசபையில் பா.ஜனதா மந்திரிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்