டுவிட்டர் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை தடுக்க கோரிய வழக்கில் டுவிட்டர் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2021-02-12 06:49 GMT
புதுடெல்லி,

டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் போலி செய்திகள்,வெறுப்புணர்வு, அவதூறு கருத்துக்களை கண்டறிந்து நீக்குவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக பிரமுகர் வினித் கோயங்கா என்பவர் மனு தாக்கல் செய்தார். 

கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவகாரம்  தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்