பொதுவிடுமுறை கொள்கை உருவாக்க மத்திய அரசுக்கு 4 வார காலஅவகாசம்; சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

சுப்ரீம் கோர்ட்டில் அகில இந்திய சிரோன்மணி சிங் சபா தாக்கல் செய்த மனுவில், ‘அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது தங்களது விருப்பத்துக்கு ஏற்ப பொது விடுமுறைகளை அறிவிக்கின்றன.

Update: 2021-02-12 09:31 GMT
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதுபோல பொதுவிடுமுறைக்கு சட்டங்கள் நமது நாட்டில் இல்லை. எனவே, ஒரே மாதிரியான பொது விடுமுறை கொள்கையை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க 4 வாரம் காலஅவகாசம் அளித்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்