"குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம்" மலப்புரத்தில் ராகுல்காந்தி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் ராகுல்காந்தி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பின்னர்"குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம்" என கூறினார்.

Update: 2021-02-22 17:19 GMT
மலப்புரம்

கேரள மாநிலம் மலப்புரத்தில் இரண்டு குழந்தைகளுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அதன்பிறகு அவர் கூறுகையில், " குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம். ஒருவர் மருத்துவர் ஆக விரும்புகிறார். மற்றொருவர் பெண் காவலர் ஆக விரும்புகிறார். நலிவுற்றவர்களையும், ஏழைகளையும் பாதுகாப்பதற்காக பெண் காவலர் ஆக வேண்டும் என அவர் விரும்புகிறார். ஏழைகளுக்கு சொந்தமானதை அபகரித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை என கூறினார் 

 மலப்புரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசும் போது கூறியதாவது:-

ரெயில்வே துறை நாட்டின் ஒரு அங்கம். அது எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தம். லட்சக்கணக்கான மக்கள் ரெயில்வே மூலம் குறைந்த விலையில் பயணம் செய்கின்றனர்.ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் அரசின் நோக்கத்தை கடந்த பட்ஜெட்டில்  கவனித்தேன். 

ரெயில்வேவைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு இது அச்சுறுத்தல்.ரெயில்வேயில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் இது பிரச்சினையை உண்டாக்கும் என கூறினார்.

மேலும் செய்திகள்