இணைநோய்கள் உள்ள 45-வயது மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி: மத்திய அரசு

இணைநோய்கள் உள்ள 45-வயது மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-02-24 10:05 GMT
புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டதிற்கு பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். 

தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட விரைவில் அனுமதி வழங்கப்படும்.  60-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேலானவர்களுக்கும் வரும்  மார்ச் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும்” என்றார். 

நாடு முழுவது கடந்த  ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்