மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசகொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-02-24 10:44 GMT
புதுடெல்லி

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டதிற்கு பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் 2 வது கட்ட கொரோனா தடுப்பூசி பணிகளில்  பல தனியார் மருத்துவமனைகள் பங்கேற்க உள்ளன.

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.  தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட விரைவில் அனுமதி வழங்கப்படும். ஆனால் அங்கு அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அடுத்த 3-4 நாட்களுக்குள் இந்த தொகை சுகாதார அமைச்சினால் முடிவு செய்யப்படும்.

இந்தியாவில் சுமார் 10 ஆயிரம் அரசு மருத்துவமனைகளிலும், 20 ஆயிரம் தனியார் மையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அரசு மையங்களில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

60-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேலானவர்களுக்கும் வரும்  மார்ச் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என கூறினார்.

மேலும் செய்திகள்