ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை; சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பயங்கரவாதிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2021-03-05 21:29 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் பல்வேறு சமூக ஊடக தளங்களின் வழியே முஸ்லிம் இளைஞர்களை கவர்ந்து, வேலைக்கு அமர்த்தி தனது அடித்தளம் அமைய ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பெரிய அளவில் சதி திட்டம் தீட்டியுள்ளது என கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 9ந்தேதி தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வழக்கு பதிவு செய்தது.

இதுபற்றிய விசாரணை முடிவில், இம்ரான் கான் பதான் என்பவர் உள்பட 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் துணை குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது.

இதில், 16 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, அவர்களுக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 16 மற்றும் டிசம்பர் 16 ஆகிய நாட்களில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் இம்ரான் கான் பதான் என்ற இம்ரான் என்ற இம்ரான் மோவாசம் கான் என்ற காசிம் என்ற பயங்கரவாதிக்கு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மேலும் செய்திகள்