மாடியில் இருந்து விழுந்தவரை காப்பாற்றும் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சம்பவம் -வீடியோ

திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சாகச சம்பவம் ஒன்றை நிகழ்த்தி கேரளாவில் பாபு என்பவர் பிரபலமடைந்து உள்ளார்.

Update: 2021-03-19 09:34 GMT
கோழிக்கோடு

ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் ஒரு நடைபாதையில் இரண்டு ஆண்கள் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு இருக்கின்றனர்.  அவர்களில் ஒருவர் சிவப்பு சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்துள்ளார். அவன் கைகளைத் கட்டிக்கொண்டு சுவற்றில்  சாய்ந்து கொண்டிருக்கிறார். மற்றொருவர் பச்சை நிற சட்டை மற்றும் குங்குமப்பூ வேஷ்டி அணிந்து, அவருக்கு அருகில் நிற்கிறா. சில நொடிகளில், சிவப்பு நிற சட்டை அணிந்தவர் மயக்கம் அடைந்து மாடியில் இருந்து கிழே விழுகிறார்.  ஆனால் அவனருகில் நிற்கும்  பச்சை நிற சட்டை விழுபவர் காலை கெட்டியாக பிடித்து கொண்டு விழாமல் தடுக்கிறான். விரைவில், ஒரு போலீஸ்காரர் உட்பட பலர் அந்த இடத்திற்கு வந்து மயங்கி கீழே விழுந்தவரை காப்பாற்று கிறார்கள் . இது ஒரு திரைப்படத்தின் காட்சி அல்ல கேரளாவின் வடகாராவில் நடிபெற்ற  நிஜ சம்பவத்தின்  சி.சி.டி.வி காட்சி.

தினசரி கூலி தொழிலாளியான பாபு (45)  என்பவர்  வருங்கால வைப்பு நிதியை செலுத்துவதற்காக  வடகார கிளையின் கேரள  வங்கிக்கு வந்தார்.வங்கியின்  முதல் மாடி வராந்தாவில் நின்று கொண்டிருந்தார். அரூரை சேர்ந்த பினு என்பவரும்  அதே வங்கியில் பணம் செலுத்த நின்று கொண்டு இருந்தார்.

திடீர் என பினு மயக்கம் அடைந்து பின்னோக்கி மாடியில் இருந்து விழுந்தார். ஆனால் இதை பார்த்த பாபு உடனடியாக செயல்பட்டு பினுவின் கால்களை இறுக்கமாக பிடித்து கொண்டார். உடனடியாக உதவிக்கௌ ஆட்களையும் அழைத்தார்.  அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து  பினுவை மேல்நோக்கி இழுத்தனர்.மற்றவர்களின் உதவியுடன் பினு மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி வெளியானதால் இது சமூக ஊடகங்களில் வைரலானது பாபு பிரபலமடைந்தார்.

தி நியூஸ் மினிட் வீடியோ:


மேலும் செய்திகள்