சத்தீஷ்காரில் ஏப்ரல் 6 முதல் ஊரடங்கு

சத்தீஷ்கார் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் வரும் 6-ந்தேதி முதல் 14-ந்தேதிவரை முழு ஊரடங்கு அறிவித்து நேற்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2021-04-02 20:12 GMT
கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் மாவட்ட கலெக்டர் சர்வேஸ்வர் நரேந்திர பூரி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். “ஊரடங்குதான் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் வழியாகும். மக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் கூறி உள்ளார்.

துர்க் மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 754 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 வாரத்தில் மட்டும் இங்கு 10 ஆயிரத்து 295 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகல், தங்கள் மாவட்ட நிலவரத்திற்கு தகுந்தபடி ஊரடங்கு அறிவித்துக்கொள்ள அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்