பஞ்சாபில் ஏப்.30 ஆம் தேதி இரவு ஊரடங்கு: மாநில அரசு அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பஞ்சாபில் வரும் 30 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-04-07 09:01 GMT
அமிர்தசரஸ்,

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில்  இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநில அரசும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசியல் கூட்டங்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், உள் அரங்கில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும், திறந்த வீதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100- பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளலாம் எனவும் மாநில அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்