லக்னோவில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு

லக்னோவில் நாளை முதல் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-07 18:12 GMT
லக்னோ,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து தினசரி தொற்றுகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்த நிலையில், கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்த வண்ணம் உள்ளன.

பஞ்சாப் அரசு, இரவு, 9:00 மணி முதல், காலை, 5:00 மணி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இது, ஏப்.,30 வரை அமலில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரவு, 10:00 மணி முதல், காலை, 5:00 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப் படவில்லை.

இந்நிலையில் உத்தர பிரதேசம் லக்னோவில் கொரோனா பரவலை தடுக்க நாளை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த பட உள்ளதாக லக்னோ காவல் ஆணையர் டி.கே.தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்