கல்லூரிக்கு கட்டணம் செலுத்த தாமதம்; தூக்க மாத்திரைகள் தின்று மருத்துவ மாணவி தற்கொலை

கொப்பல் அருகே சம்பவம் தூக்க மாத்திரைகளை தின்று மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-04-07 20:50 GMT
பெங்களூரு:

மருத்துவ மாணவி பிணம்

  பெங்களூரு நகரை சேர்ந்தவர் நீதா ரகுமான் (வயது 22). இவர், கொப்பல் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் 3-வது ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். கொப்பல் டவுனில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் நீதா வசித்து வந்தார்.

  கடந்த 5-ந் தேதி நள்ளிரவு பெங்களூருவில் வசிக்கும் தன்னுடைய தாயுடன் வீடியோ அழைப்பு மூலமாக நீதா பேசி இருந்தார். பின்னர் மறுநாள் காலையில் (நேற்று முன்தினம்) நீதா தங்கி இருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வார்டன் கதவை திறந்து பார்த்த போது நீதா பிணமாக கிடந்தார்.

கல்லூரி கட்டணம் செலுத்த தாமதம்

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொப்பல் டவுன் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தூக்க மாத்திரைகளை தின்று நீதா தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் நீதாவின் பெற்றோர் பணப்பிரச்சினையில் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக கல்லூரிக்கு கட்டணம் செலுத்த தாமதமானதாக தெரிகிறது.

  இதன் காரணமாக மனம் உடைந்த நீதா தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தற்கொலைக்கு முன்பாக கடைசியாக பெற்றோரை பார்க்க வீடியோ அழைப்பு மூலமாக தாயுடன் நீதா பேசி இருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொப்பல் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்