85 நாட்களில் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய சுகாதாரத்துறை தகவல்

85 நாட்களில் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-04-10 16:30 GMT
புதுடெல்லி,

நாட்டில் இதுவரை 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது, முதலில் முன்களப்பணியாளர்கள், இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தற்போது மூன்றாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்த ஆரம்பித்து 85-வது நாளான இன்று 10 கோடி டோஸை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறைந்த நாட்களில் 10 கோடி டோஸ் தடுப்பூசி என்ற மைல் கல்லை எட்டிய முதல் நாடு இந்தியா என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்