மராட்டியத்தில் முழு ஊரடங்கா? இன்று இரவு 8.30 மணிக்கு உத்தவ் தாக்கரே உரை

மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது.

Update: 2021-04-13 12:15 GMT
மும்பை,

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை வீசி வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது.  தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5½ லட்சத்தை தாண்டி உள்ளது. நோய் பரவல் சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மராட்டிய மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இன்று மாநில மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக இரவு 8.30 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதனால், ஊரடங்கு தொடர்பாக அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே, முழு ஊரடங்கு அச்சம் காரணமாக மும்பை, தானே, புனே நகரங்களில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநில ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் செய்திகள்