மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார்க்கு கொரோனா

மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-13 16:46 GMT
புதுடெல்லி, 

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசில் தொழிலாளர் நலத்துறை மந்திரி பதவி வகிப்பவர், சந்தோஷ் கங்குவார் (வயது 72). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை கொரோனா பரிசோதனை அறிக்கை காட்டுகிறது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 

எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. இருப்பினும் என்னோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும்” என கூறி உள்ளார்.இவர் விரைவில் நலம்பெற மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாக்குர் வாழ்த்தி உள்ளார்.

மேலும் செய்திகள்