கர்நாடகத்தில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை; கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

Update: 2021-04-18 17:14 GMT

கர்நாடகத்தில் 7 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலைங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 812 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் மாநிலத்தில் தற்போது தினசரி ஆக்சிஜன் தேவை 272 டன்னாக உள்ளது. அதனால் கர்நாடகத்தில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை என்று யாரும் தேவையின்றி வதந்திகளை பரப்ப வேண்டாம்.

கொரோனா நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய பெங்களூருவில் உள்ள மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் ஒரு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 439 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே அதிகபட்ச தடுப்பூசி வினியோகம் ஆகும்.

இவ்வாறு சுதாகர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்