ரெம்டெசிவர் மருந்தைப் பதுக்கி விற்றால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் எச்சரிக்கை

ரெம்டெசிவர் மருந்தைப் பதுக்கி விற்றால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி. முதல்வர் ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-04-21 22:09 GMT

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் பதுக்கி விற்பனை செய்தால், அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்

 உத்தர பிரதேசத்தில்  முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் இன்று லக்னோவில் உயர் அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தின் முடிவில், உத்தரப் பிரதேசத்தில் லாக்டவுன் ஏதும் நடைமுறைப்படுத்தப்படாது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆக்சிஜன் கொண்டுவரும் டேங்கர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும், ஆக்சிஜன் வழங்கும் நிறுவனங்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

மாநிலத்தில் ரெம்டெசிவர், ஃபேரிப்ளூ மருந்துகளை கள்ளச்சந்தையில் பதுக்குவோர் மற்றும் விற்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுவை காவல்துறை டிஜிபி உருவாக்கவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அவ்வாறு மருந்துகளைப் பதுக்குவோர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டம், குண்டாஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்