கேரளாவில் இன்று புதிதாக 21,890 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 28 பேர் பலி

கேரளாவில் இன்று புதிதாக 26 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-26 15:31 GMT
கோப்புப்படம்
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய பாதிப்புகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டது.

அதன்படி, கேரளாவில் இன்றைய ஒரேநாளில் 21 ஆயிரத்து 890 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14.27 லட்சத்தை தாண்டியுள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 7 ஆயிரத்து 943 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 89 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு கேரளாவில் இன்று ஒரேநாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்