மராட்டியத்திற்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது - மந்திரி ராஜேஷ் தோபே தகவல்

மராட்டியத்திற்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்டவைகள் வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.

Update: 2021-04-27 19:52 GMT
மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. மாநிலத்தில் நோய் பாதிப்புக்கு சுமார் 6¾ லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாள் தோறும் சுமார் 60 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக மாநிலத்தில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பல உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில் மாநிலத்திற்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்டவைகள் வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார். இது குறித்து மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-

10 லட்சம் ரெம்டெசிவிர், 40 ஆயிரம் ஆக்சிஜன் கன்சன்டிரேட்டர்ஸ், 25 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன், 27 ஆக்சிஜன் ஐ.எஸ்.ஒ. டேங்குகள் வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் 3 நாட்களுக்குள் ஒப்பந்த தொகையை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்