டெல்லியில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது

டெல்லியில் எந்தவொரு நடவடிக்கையையும் நிறைவேற்றும் முன்னர் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் கட்டாயம் ஆகியுள்ளது.

Update: 2021-04-28 06:37 GMT
Photo Credit: PTI
புதுடெல்லி,

டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா-2021 (என்சிடி மசோதா) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. 

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  இந்த மசோதாவுக்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், டெல்லிக்கு ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டம் நேற்று இரவு முதல் அமலுக்கு வந்ததாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், டெல்லியில் எந்தவொரு  நடவடிக்கையையும் நிறைவேற்றும் முன்னர் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும்  கட்டாயம் ஆகியுள்ளது. 

மேலும் செய்திகள்