நாட்டில் நிலவும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை அடுத்த மாதம் இரண்டாவது வாரம் சீரடையும்

நாட்டில் நிலவும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் சீரடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-04-30 08:24 GMT
புதுடெல்லி

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால் நோயாளிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜனின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில், அதன் பற்றாக்குறையும் நீடித்து வருகிறது.

நாளொன்றுக்கு 7200 டன்களாக இருந்த மருத்துவ ஆக்சிஜனின் தேவை 8 மடங்காக அதிகரித்துள்ளது. ஆக்சிஜனுக்கான தேவை ஏப்ரல் 25 முதல் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது.ஏப்ரல் 15 ம் தேதி முதல்  10 நாட்களுக்குள் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது,

இந்த நிலையில் உற்பத்தி மேலும் 25 சதவிகிதம் அதிகரிக்கப்படும்.இதனால் நாட்டில் நிலவும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் சீரடையும்  என முன்னணி ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனமான லின்டே பிஎல்சி (Linde Plc) தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்