பெங்களூருவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம்

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Update: 2021-04-30 17:05 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அம்மாநிலத்தில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரம் பேருக்கு கர்நாடகாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  

தலைநகர் பெங்களூருவில் மட்டும் 26 ஆயிரத்து756- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளது. இதற்கிடையில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் நாளை 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்