ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,807- பேருக்கு கொரோனா தொற்று

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,807- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-08 05:04 GMT
புவனேஷ்வர்,

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,807- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து  8,401 பேர் குணம் அடைந்த நிலையில், 21 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில்  கொரோனா தொற்று பாதிப்புடன்  90 ஆயிரத்து 335- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஒடிசாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 207- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 31 ஆயிரத்து 658- ஆக இருக்கிறது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,161- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்