கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு உதவி: டெல்லி முதல் மந்திரி உறுதி

கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்கும் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2021-05-14 17:39 GMT
புதுடெல்லி,

நாட்டின் கொரோனாவின் 2வது அலையில் அதிக அளவிலானோர் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.  கொரோனா தொற்றால் அனைத்து வயது தரப்பினரும் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் இன்று கூறும்பொழுது, கொரோனா தொற்றுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை மாநில அரசே ஏற்கும் என்று கூறியுள்ளார்.

இதேபோன்று, வருவாய் ஈட்ட கூடிய உறுப்பினரை இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளார்.

டெல்லியில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.  கடந்த 24 மணிநேரத்தில் 289 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20,907 ஆக உயர்வடைந்து உள்ளது.

மேலும் செய்திகள்