கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் ஆந்திர அரசு அறிவிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-05-17 04:46 GMT
விசாகபட்டினம்

ஆந்திரா மாநிலத்தில் இதுவரை மொத்தம் 14,32,596 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை 9,372 பேர் இந்த நோயால் உயிர் இழந்து உள்ளனர்.  ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் (1,094 பேர்), கிருஷ்ணா மாவட்டம் (864 பேர்), கிழக்கு கோதாவரி மற்றும் குண்டூர் மாவட்டங்கள் (தலா 838 பேர்) பதிவாகியுள்ளன.

கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்களுக்கு கண்ணியமான இறுதி சடங்குகளை நடத்தும்  வகையில் இறுதிச் சடங்குகளை நடத்த ஆந்திர மாநில அரசு குடும்பத்திற்கு ரூ .15,000 அறிவித்துள்ளது.கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அல்லது உறவினர்கள்  தகனங்களை கண்ணியமாக நடத்த முடியாமல் போன பல சம்பவங்களைத் தொடர்ந்து இந்த முடிவை மாநில அரசு எடுத்து உள்ளது. 

இந்த தொகை இறுதி சடங்கு கட்டணமாக இருக்கும் என்று கூறி. COVID-19 நோயாளிகளின் இறுதி சடங்குகளுக்கு முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ரூ .15,000 அறிவித்தபோது, 2020 ஜூலை மாதம் வெளியிடப்பட்ட உத்தரவுகளின் தொடர்ச்சியாக சமீபத்திய உத்தரவுகள் உள்ளன.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொரோனா உயிரிழப்புக்கும் இந்த நிவாரண நிதி அளிக்கப்படும்.மே 16 ம் தேதி, ஆந்திர மாநில அரசின் முதன்மை செயலாளர் அனில் குமார் சிங்கால் இந்த உத்தரவை பிறப்பித்த்து உள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இத்தொகை மூலம் கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்