உத்தரகாண்டில் ஜூன் 1-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

உத்தரகாண்டில் ஜூன் 1-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-05-24 17:54 GMT

டேராடூன், 

உத்தரகாண்டிலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.

ஆனால் கொரோனா பரவல் குறையாததால் ஊரடங்கை ஜூன் 1-ந் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில மந்திரியும், செய்தி தொடர்பாளருமான சுபோத் உனியால் கூறுகையில், ‘ஊரடங்கு காலத்தில் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பால், மீன், பழங்கள் மற்றும் காய்கறி விற்பனை கடைகள் திறந்திருக்கும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்