மே.வங்க தலைமைச்செயலாளர் ஓய்வு, மம்தா பானர்ஜியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்

மேற்கு வங்காளத்தின் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற அலபன் பந்தோபாத்யா, மம்தா அரசின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-05-31 12:56 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் தலைமைச்செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை திரும்ப அழைத்து உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ஏற்க மறுத்த மம்தா பானர்ஜி, மத்திய அரசின் முடிவு ஒருதலைபட்சமானது எனவும் உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இந்தக் கடிதம் எழுதி சில மணி நேரங்களே ஆன நிலையில், தலைமைச்செயலாளர் பொறுப்பில் இருந்து அலபன் பந்தோபாத்யா ஓய்வு பெற்றுவிட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும்,  தனது அரசின் தலைமை ஆலோசகராக அடுத்த மூன்று ஆண்டுகளாக அவர் செயல்படுவார் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.   மேற்கு வங்காளத்தின் புதிய தலைமைச்செயலாளராக ஹெச். கே திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகள்