மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் - ராகுல் காந்தி

மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-06-02 07:23 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. 

இதற்கிடையில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி போர்க்கால அடிப்படையில் அனைத்து மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.  இந்தியாவில் இதுவரை 21.85 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனாவுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை விடுத்து வருகிறார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

கொரோனாவை வெல்ல தடுப்பூசி ஒரு வலுவான ஆயுதம். இந்திய மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க மக்களாகிய அனைவரும் நீங்கள் குரல் எழுப்பி மத்திய அரசை எழுப்புங்கள்! என்று கூறியுள்ளார்.

இதற்காக #SpeakUpForFreeUniversalVaccination என்ற ஹேஷ்டேக்கில் மக்கள் தங்கள் கருத்துகளை பதிவிடுமாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்